Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 29 March 2025
webdunia

சமூக விலகலை கடைபிடித்த பால்காரர்..வைரலாகும் போட்டோ

Advertiesment
சமூக விலகலை கடைபிடித்த பால்காரர்..வைரலாகும் போட்டோ
, வெள்ளி, 8 மே 2020 (22:43 IST)
கொரொனா வைரஸ் தாக்கம் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடுவதற்கே அச்சம் கொண்டுள்ள சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில்,சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டி அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், பல்காரர் ஒருவர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதுபோன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

பால்காரர் என்றாலே அவரது பால்கேனை நெருங்கி பால் வாங்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள ஒரு படத்தில், ஒரு பால்காரர் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு நீண்ட குழலை வைத்து, அதில் புனல் வழியே பாலை ஊற்றுகிறார். இதனால் சமூக இடைவேளி கடைபிடிக்கப்படுகிறது.

பால்காரரின் இந்த ஐடியா மக்களிடம் பெரும்  வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூம் செயலி மூலம் தூக்குத்தண்டனை... பலரும் எதிர்ப்பு