Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

Advertiesment
Telangana milkman

Prasanth K

, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (11:11 IST)

ரஜினி நடித்த அண்ணாமலை படத்தில், எம்.எல்.ஏ வினுச்சக்கரவர்த்தி அண்ணாமலையில் மாட்டுத் தொழுவத்தை இடித்துவிட, அதற்கு ரஜினி பதிலடியாக தனது மாடுகளை எம்.எல்.ஏவின் வீட்டிற்குள் சென்று கட்டி வைப்பார். படத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது தெலுங்கானாவில் உண்மையாகவே நடந்துள்ளது.

 

தெலுங்கானா மாநிலத்தின் பூபாலப்பள்ளி அருகே உள்ள குரகுலாவை சேர்ந்தவர் ஓடேலு. இவரது மனைவி லலிதா. இவர்கள் சிங்கரேணி மருத்துவமனை அருகே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். எருமை மாடுகளை மேய்த்து பால் கறந்து விற்று வரும் ஓடேலு, தனது வீட்டின் அருகிலேயே ஒரு கொட்டகை அமைத்து மாடுகளை பராமரித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் சாலையை விரிவாக்கம் செய்யப்போவதாக சொல்லி ஒடேலுவின் மாட்டுக் கொட்டகையை அரசு அதிகாரிகள் இடித்துள்ளனர். இதனால் கோபமடைந்த ஒடேலு, தனது மனைவி, நண்பர் ரமேஷ் உடன் எருமை மாடுகளை ஓட்டிச் சென்று எம்.எல்.ஏ அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டுள்ளார்.

 

இந்த சம்பவம் அறிந்து போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது, எம்.எல்.ஏ தூண்டுதலின் பெயரால்தான் அதிகாரிகள் தனது மாட்டுக் கொட்டகையை இடித்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை போலீஸார் கைது செய்ய முயன்றபோது அவர் பூச்சிமருந்தை குடித்ததால் பரபரப்பு எழுந்தது. உடனே அவரை மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமலை கோயிலில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. கோவில் தேவஸ்தானம் எச்சரிக்கை..!