Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாலி கட்டுறியா.. இல்ல சாவுறியா? டீச்சரை துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்த சம்பவம்! - பீகாரில் பரபரப்பு!

Bihar kidnap marriage

Prasanth Karthick

, ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (10:41 IST)

பீகாரில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த ஆசிரியரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பீகார் உள்ளிட்ட பகுதிகளில் பகடுவா விவாஹ் (கடத்தல் திருமணம்) என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. ஒரு நபரை கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்கும் முறைதான் இது. தனுஷ் நடித்த கல்யாண கலாட்டம் படத்தில் இந்த பகடுவா விவாஹ் பற்றிய காட்சிகள் இருக்கும். அப்படியான ஒரு திருமணம் துப்பாக்கி முனையில் நடந்த வீடியோதான் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

 

பீகார் மாநிலத்தின் பகுசராய் நகரை சேர்ந்தவர் அவினாஷ். இவர் மாநில அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு கல்லூரி படிக்க வந்த குஞ்சம் என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் அடிக்கடி வெளியே சுற்றுவது, விடுதியில் அறை எடுத்து உல்லாசமாக இருப்பது என காதலை வளர்த்து வந்துள்ளனர்.

 

இதற்கிடையே அவினாஷ்க்கு அரசு ஆசிரியர் வேலை கிடைத்ததும் குஞ்சமை தவிர்க்க தொடங்கியுள்ளார். குஞ்சம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு அவினாஷ் மறுத்துள்ளார். இதுகுறித்து குஞ்சம் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

 

அதை தொடர்ந்து அவினாஷ் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் அவினாஷை கடத்தி ஒரு கோவிலுக்கு கொண்டு சென்றுள்ளது. அங்கு மணப்பெண்ணாக குஞ்சம் நிற்பதை கண்டு அவினாஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது கால்களை கட்டிய கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டி குஞ்சத்திற்கு தாலி கட்ட வைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இப்படி ஒருவரை கட்டாயப்படுத்தி, மிரட்டி திருமணம் செய்து வைப்பது சரியா என்பது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருப்ப நாடுகளில் இருந்து இந்தியாவை நீக்கிய ஸ்விட்சர்லாந்து! அதிகரிக்கப் போகும் வரிவிகிதம்! - என்ன காரணம்?