Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியரை பழிவாங்க நாற்காலியில் வெடிகுண்டு! - அரியானாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பள்ளி மாணவர்கள்!

Hariyana teacher

Prasanth Karthick

, ஞாயிறு, 17 நவம்பர் 2024 (12:38 IST)

அரியானாவில் தங்களை திட்டிய ஆசிரியரை பழிவாங்க மாணவர்கள் வெடிகுண்டு தயாரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

முந்தைய காலங்களில் மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர் தண்டிப்பார் என்று பயந்த காலங்கள் போய், தற்போது மாணவர்கள் தங்களை ஏதாவது செய்துவிடுவார்களோ என்று ஆசிரியர்கள் அஞ்சும் அளவிற்கு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அப்படியானதொரு சம்பவம் அரியானாவிலும் நடந்துள்ளது.

 

அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பெண் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடங்களை நடத்தியுள்ளார். அப்போது மாணவர்கள் சரியாக படிக்காததால் அவர்களை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மாணவர்கள் ஆசிரியரை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர்.
 

 

இதற்காக யூட்யூபை பார்த்து வெடிமருந்தை பயன்படுத்தி வெடிகுண்டு ஒன்றை தயாரித்துள்ளனர். அதை ஆசிரியரின் இருக்கைக்கு கீழே வைத்து, அவர் அமரும்போது வெடிக்குமாறு செட் செய்துள்ளனர். அதில் அந்த பெண் ஆசிரியர் அமர்ந்ததும் வெடிக்குண்டு வெடித்துள்ளது. ஆனால் நல்வாய்ப்பாக ஆசிரியர் பெரிய காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.

 

இந்த சம்பத்தை தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட 13 மாணவர்களை ஹரியானா கல்வித் துறை ஒரு வார காலம் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால் இப்படி மாணவர்கள் ஆசிரியர்கள் மீது தொடுக்கும் வன்முறை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்! மும்பையில் பரபரப்பு..!