Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

தீய நோக்கத்துடன் தொட வந்தால் வெட்டுங்கள்; மாணவிக்கு வாள் கொடுத்த பாஜக எம்.எல்.ஏ..!

Advertiesment
Controversy Over BJP MLA's Sword Distribution to Female Students in Bihar

Siva

, ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (11:09 IST)
தீய நோக்கத்துடன் ஒருவர் உங்களை தொட வந்தால், அவரது கையை வெட்டுங்கள் என பீகார் மாநில பாஜக எம்எல்ஏ மாணவிகளுக்கு வாள்களை பரிசாக வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலத்தில் நடந்த பூஜை ஒன்றில் கலந்து கொண்ட பாஜக எம்எல்ஏ மிதிலேஷ் குமார் என்பவர், "எங்கள் சகோதரிகளை யாராலும் தீய நோக்கத்துடன் தொட வந்தால், அவரது கை இந்த வாள்களால் வெட்டப்படும்" என்று தெரிவித்தார்.

 "நம் சகோதரிகள் கையை வெட்டும் அளவுக்கு துணிச்சலாக இருக்க வேண்டும்" என்றும், "தேவை இருந்தால் இதை கண்டிப்பாக சகோதரிகள் செய்ய வேண்டும்" என்றும், "தீய எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும், தீயவர்களுக்கு எதிராக மாணவிகள் செயல்பட வேண்டும் என ஊக்கப்படுத்திய அவர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வாள்களை வழங்கினார்.

 ஆயுத பூஜை அன்று ஆயுதங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்ற நிலையில், அவர் துப்பாக்கிகள், வாள்கள் மற்றும் ஆயுதங்களை வைத்து வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறு செய்ய முயற்சி செய்பவர்களை பிடித்து காவல்துறையில் ஒப்படைக்க வேண்டுமே தவிர, மாணவிகளின் கையில் வாள்களை கொடுத்து வெட்ட சொன்னால், அந்த மாணவி தான் சிறைக்கு செல்வார்; அவரது எதிர்காலம் பாதிக்கப்படும்" என்று சமூக ஆர்வலர்கள் இந்த பாஜக எம்எல்ஏவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக குறைப்பு- திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டி வெளியீடு..!