காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக வாரியத்தை அமைக்கவும் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கானது வரும் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
5 ஆம் தேதி யான இன்று அனைத்து எதிர் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவாதாக தெரிவித்தனர். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.
தமிழகத்தில் பேருந்துகள் மிக குறைவாகவே இயக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர போக்குவரத்துத்துறை உத்தரவுவிட்டுள்ளது. அப்படி மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.