Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டிய முதலாளி மனைவி.. ஆள் இல்லாத நேரத்தில் தீர்த்துக் கட்டிய டிரைவர்! - அதிர்ச்சி சம்பவம்!

Prasanth K
வியாழன், 3 ஜூலை 2025 (13:55 IST)

டெல்லியில் தன்னை திட்டிய முதலாளியின் மனைவி, மகனை டிரைவர் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லியில் லஜ்பத் நகரில் வசித்து வரும் துணிக்கடை உரிமையாளர் குல்தீப் சேவானி. இவருக்கு ருச்சிகா என்ற மனைவியும் 14 வயது மகனும் உள்ளனர். இவரிடம் பீகாரை சேர்ந்த முகேஷ் என்பவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். சில நாட்கள் முன்னதாக முகேஷை எதற்காகவோ ருச்சிகா கடுமையாக திட்டியுள்ளார். இதனால் முகேஷ் - ருச்சிகா இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது,

 

இந்நிலையில் அவர்களை பழிவாங்க நினைத்த முகேஷ், தனது முதலாளி இல்லாதபோது அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த ருச்சிகாவையும், அவரது மகனையும் கத்தியால் குத்தி கொடூரமாக கொன்று விட்டு தப்பியுள்ளார். வீட்டிற்கு வந்தபோது மனைவி, மகன் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுத குல்தீப் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

 

அதன்படி நடவடிக்கை எடுத்த போலீஸார் முகேஷை பீகார் தப்பி செல்ல முயன்றபோது பிடித்துள்ளனர். அதன்பின்னர் முகேஷ் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments