அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் பொருளாதாரத்தை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அவரது செயலை "பள்ளி மைதான ரவுடி"யின் நடவடிக்கைக்கு ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.
"டிரம்ப் இந்தியாவுடன் இப்படி பேசுவது சரியானது என்று நான் நம்பவில்லை. இந்தியாவின் சுயமரியாதையில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது" என்று சசி தரூர் கூறினார்.
மேலும், இந்திய அரசியல் எந்த கட்சியின் ஆட்சியில் இருந்தாலும், நமது சுயமரியாதை என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார். நமது நாட்டில் விவசாயத்தை சார்ந்துள்ள 70 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, அமெரிக்க மானிய தானியங்களை நமது சந்தையில் குவிக்க முடியாது என்றும், எனவே, இந்திய அரசு எடுத்தது சரியான நடவடிக்கைதான் என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் தனது வழக்கத்திற்கு மாறான உத்திகளுக்காக பிரபலமானவர் என்றும், அவர் ஒரு ஒப்பந்தத்தை முடிக்க எதையும் செய்வார் என்றும் சசி தரூர் கூறினார். ஆனால், அவமானப்படுத்தும் மொழியை பயன்படுத்த அவர் "இந்தியா" என்ற தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்துவிட்டார் என்றும், அதற்கான விளைவுகளை அவர் எதிர்கொள்வார் என்றும் சசி தரூர் எச்சரித்துள்ளார்.