Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பக்தர்கள் சென்ற பேருந்தை தாக்கிய பயங்கரவாதிகள்! 10 பேர் பரிதாப பலி! – காஷ்மீரில் அதிர்ச்சி!

Advertiesment
Kashmir devotees bus attcked

Prasanth Karthick

, திங்கள், 10 ஜூன் 2024 (09:29 IST)
ஜம்மு-காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியான சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



காஷ்மீரில் உள்ள சிவகோரி கோவிலுக்கு செல்வதற்காக பக்தர்கள் பலர் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர். நேற்று மாலை பேருந்து ரியாசி மாவட்டத்தில் உள்ள தெரியத் கிராமம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

இதில் பேருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக பலியான நிலையில், 30க்கும் மேற்பட்டோர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சிங்ஹாவை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கூறிய அவர், இதற்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள ராகுல்காந்தி “பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் கவலைக்கிடமான நிலையில் உள்ளதை விளக்கும் உண்மையான பாடம்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 மாநிலங்களில் இருந்து 72 அமைச்சர்கள்! பாஜக புதிய அமைச்சரவையின் சுவாரஸ்யமான தகவல்கள்!