மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிற்சாலை பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் உள்ள ஆம்பர் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் நேற்று பயங்கரமாக வெடித்தது. இந்த தொழிற்சாலையின் பாய்லர் வெடித்த போது 4 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு உணரப்பட்டதாகவும், இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தொழிற்சாலை பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், இதனால் இந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 48 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், காயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.