Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 11 April 2025
webdunia

மருந்துக்கு பதிலாக கிருமி நீக்கம் செய்யப்படாத குழாய் நீரை செலுத்தியதில் 10 பேர் பலி

Advertiesment
10 people died

Sinoj

, சனி, 6 ஜனவரி 2024 (15:47 IST)
அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்படாத குழாய் நீரை மருந்திற்கு பதிலாக கொடுத்ததில் 10 பேர் மரணம் அடைந்த நிலையில் இதுகுறித்து காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்,

அமெரிக்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில், ஓரிகான் மாகாணத்தில் மெட்போர்டு நகரில் அசாந்தே ரேக் மண்டல மருத்துவ மையத்தில், 10 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

இந்த சம்பவத்தில் முன்னாள் ஊழியர் ஒருவர் மருந்துகளை திருடியிருக்கலாம் என மருத்துவமனை அதிகாரிகள் கடந்த மாதம் போலீஸில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து நடந்த விசாரணையில், சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்படாத குழாய் நீரை, வலி நிவாரண மருந்தான பென்டனைல் மருந்திற்கு பதிலாக கொடுத்ததில், தொற்றுப் பாதித்ததில், 10 பேர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்போர்டு காவல்துறையின் அதிகாரி ஜெப் கிர்க்பேட்ரி,  நோயாளிகளின் நலனுக்கு எதிராக இது செயல்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு ஏற்பட்ட பாதிபுகள் பற்றி ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதில், கைது சம்பந்தமாக எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா..! அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்...!!