காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, பெரும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, பஹல்காம் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர் உள்பட அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரிந்த உயர் நிலை போலீசார் அனைவரும் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பாதுகாப்பு காரணங்களால் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து போலீசாரும் அனந்த்நாக் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் 6 இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள்:
இன்ஸ்பெக்டர் அப்துல் ரஷீத் – ஐஷ்முகாம் போலீஸ் நிலைய SHO
இன்ஸ்பெக்டர் நிசார் அகமது – ஸ்ரிகுஃப்வாரா SHO
இன்ஸ்பெக்டர் பீர் அகமது – பஹல்காம் SHO
இன்ஸ்பெக்டர் ரியாஸ் அகமது – அனந்த்நாக் மாவட்ட போலீஸ் லைனில் மாற்றம்
இன்ஸ்பெக்டர் சலீந்தர் சிங் – அனந்த்நாக் மாவட்ட போலீஸ் லைனில் மாற்றம்
இன்ஸ்பெக்டர் பர்வேஸ் அகமது – கொகர்நாக் SHO
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு புதிய அதிகாரிகளால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.