Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலுக்கு அடியில் அதிநவீன ஆயுத சோதனை.. இந்திய கடற்படை சாதனை..!

Advertiesment
பஹல்காம் தாக்குதல்

Siva

, செவ்வாய், 6 மே 2025 (14:08 IST)
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்துவதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை நடத்தினாலும், இந்திய விமானப்படை ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
 
இதனுடன், இந்திய கடற்படை தங்களது ஆயுத சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஒ. மற்றும் இந்திய கடற்படை இணைந்து உருவாக்கிய எம்.ஐ.ஜி.எம். என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஆயுதத்தை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளார்கள்.
 
இந்த சோதனை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.ஐ.ஜி.எம். குறைந்த அளவிலான வெடிபொருளுடன் கடலுக்கடியில் சோதனை செய்யப்பட்டது. இது கடலுக்கு அடியில் வெடிக்கும் கண்ணிவெடி தாக்குதல் ஆகும். மேலும் எதிரி நாட்டின் அதிநவீன போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை குறிவைத்து தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த வெற்றிகரமான சோதனைக்கு பிறகு, எம்.ஐ.ஜி.எம். இந்திய கடற்படையில் சேர்க்கப்படத் தயாராக இருப்பதாக டி.ஆர்.டி.ஒ. தலைவர் டாக்டர் சமீர் வி காமத் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவபழை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!