ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உட்பட 19 அம்சங்களையும் நிறைவேற்ற கோரி ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. ஆனால், இதை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. இதனால் அந்த கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற பட்ஜெட் தொடரிலிருந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியும் வந்தனர்.
இந்த நிலையில் இன்று பாரளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தெலுங்கு தேசம் எம்பிக்கள் சபாநாயகர் அறையில் உள்ளே புகுந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.