Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.30,000.. இலவச மின்சாரம் - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகள்

Advertiesment
தேஜஸ்வி யாதவ்

Mahendran

, செவ்வாய், 4 நவம்பர் 2025 (10:55 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட பரப்புரை முடிவில், மகாகத்பந்தன் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டார்.
 
தனது அரசு அமைந்தால், 2026 ஜனவரி 14  அன்று பெண்களுக்குத் தலா ரூ.30,000 வங்கிக்கணக்குகளில் நேரடியாச் செலுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
 
விவசாயிகளுக்குச் சலுகை அளிக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல், நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.300 ஊக்கத்தொகையும், கோதுமைக்குக் குவிண்டாலுக்கு ரூ.400 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். மேலும், விவசாய பாசனத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
பீகார் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்றும், நிதீஷ் குமார் அரசை வீழ்த்த மகாகத்பந்தன் தயாராக உள்ளது என்றும் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் சோட்டா பாய் தான் தேஜஸ்வி யாதவ்.. ஒவைசி கடும் விமர்சனம்..!