அரசு பள்ளியில் ஆசிரியை ஆக வேலை செய்யும் ஒருவர், "டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டல் வந்ததை அடுத்து, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக ரேஷ்மா பாண்டே என்பவர் பணி செய்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் விஷம் குடித்து உயிரிழந்தார். ஆசிரியை அனுப்பிய பார்சலில் சட்ட விரோதப் பொருட்கள் இருப்பதாக மர்ம நபர் ஒருவர் போன் செய்து, "உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருக்கிறோம்" என்று பயமுறுத்தியுள்ளனர்.
"டிஜிட்டல் அரெஸ்ட்" என்ற மிரட்டல் வந்ததும், அவர் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்த ₹22,500 தொகையை அனுப்பியுள்ளார். அதற்கும் மேலாக பணம் கேட்ட மிரட்டியதாகவும், ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் அவரை மீண்டும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், "டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பயத்தில் அவர் விஷம் குடித்துவிட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததால், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால், "டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மிரட்டல்களை நம்பி யாரும் பயப்பட வேண்டாம். உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.