Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாடா நியூ செயலியில் இணைகிறது டாடா மோட்டார்ஸ்: இனி ஆன்லைனில் கார் வாங்கலாம்!

Advertiesment
tata neu
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:56 IST)
சமீபத்தில் வெளியான டாடா நியூ செயலியில் காய்கறி முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை வாங்கலாம் என்பதால் பொதுமக்கள் அந்த செயலியை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் டாடா நியூ செயலியில் டாடாவின்  இன்னொரு தயாரிப்பான டாடா மோட்டார்ஸ் கார்களையும் செயலி மூலம் வாங்கலாம் என கூறப்படுகிறது 
இன்னும் ஒரு சில மாதங்களில்தான் டாடா நியூ செயலியில் டாட்டா மோட்டார்ஸ் இணைக்கப்படும் என்றும் அதன்பிறகு கார்களை ஆன்லைனிலேயே புக் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் சி.இ.ஓ தெரிவித்துள்ளார் 
 
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் கார் ஆர்டர் செய்தால் வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் அகண்ட பாரதம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்