Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போவது இவர்தான்… செம்ம கூட்டணி!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போவது இவர்தான்… செம்ம கூட்டணி!
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (15:57 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான தர்பார் திரைப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம்.

இந்நிலையில் தற்போது அவர் விக்ரம் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர ஏ ஆர் முருகதாஸ் கிங்காங் பாணியிலான குரங்கு படம் ஒன்றை இயக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீஸ்ட் படத்தைப் பார்த்த ரஜினி… ரியாக்‌ஷன் என்ன? வைரலாக பரவும் செய்தி