இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் எலக்ட்ரிக் கார் மற்றும் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய சந்தையில் ஒரு லட்சம் எலக்ட்ரிக் கார்களுக்கு மேல் விற்பனை செய்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சாதனை செய்துள்ளது. இதில் 50,000 எலக்ட்ரிகார்கள் கடந்த 9 மாதங்களில் மட்டுமே விற்பனை ஆகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேலும் 3 புதிய எலக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்யவும் டாடா நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.