Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருத்தம்தான் ஆனாலும் என்ன செய்வது…? ஷிகார் தவான் பெருந்தன்மை!

Advertiesment
வருத்தம்தான் ஆனாலும் என்ன செய்வது…? ஷிகார் தவான் பெருந்தன்மை!
, வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (12:36 IST)
இந்திய ஒருநாள் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் கடந்த சில மாதங்களாகவே இடமளிக்கப்படவில்லை. தொடர்ந்து சீரான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வரும் நிலையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு ஷுப்மன் கில்லின் தேர்வுதான் காரணமாக சொல்லப்படுகிறது.

இந்திய அணிக்காக பல வெளிநாட்டு தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள தவான் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரையாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பிசிசிஐ எடுத்துள்ள முடிவு அநியாயமானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆசியப் போட்டிக்கான அணி

இந்நிலையில் விரைவில் நடக்க உள்ள ஆசியக் கோப்பை அணியிலாவது தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொடருக்கும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதுபற்றி பேசியுள்ள தவான் “முதலில் என்னை தேர்வு செய்யாதது எனக்கும் வருத்தமாகதான் இருந்தது. ஆனால் தேர்வாளர்கள் வித்தியாசமான செயல்முறையை மேற்கொள்கிறார்கள் என நினைக்கிறேன். ருதுராஜ் அணியை வழிநடத்துவதில் எனக்கு மகிழ்ச்சிதான்” எனக் கூறியுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)

ரிசர்வ்ட் ப்ளேயர்கள்: யஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“இதனால்தான் டி 20 போட்டிகளில் விளையாடுவதில்லை..” ரோஹித் ஷர்மா சொல்லும் காரணம்!