ரஜினியின் ஜெயிலர் படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீஸான நிலையில், இப்படம் பற்றி அமெரிக்க பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.
ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
நேற்று வெளியான முதல் நாளில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. எனவே, இனி வ்ரும் நாட்களிலு வாரக் கடைசியிலும் இப்படம் வசூலில் சாதனை படைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே, பிரபல தனியார் கம்பெனிகள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் பட ரிலீஸுக்காக ஆகஸ்ட் 10 ஆம் தேதி விடுமுறை அளிப்பதாக அறிவித்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
இதுபற்றி அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல CNN என்ற செய்தி நிறுவனம், இந்தியாவின் Big SuperStar -ன் ஜெயிலர் படத்திற்கு டிக்கெட் கொடுத்து விடுமுறையும் அறிவித்த கார்பரேட் நிறுவனங்கள் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் பட ரிலீஸுக்கு அமெரிக்க ரஜினி ரசிகர்கள் நேற்று அவரது பேனருக்கு பால் அபிஷேகம் செய்தது குறிப்பிடத்தக்கது.