Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் முதல்முதலாக தனியார் ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை! டாடா எடுக்கும் சூப்பர் முயற்சி..!

Advertiesment
Tags: டாடா

Siva

, வியாழன், 2 அக்டோபர் 2025 (12:21 IST)
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம், ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் அசெம்பிளி ஆலையை  அமைக்க உள்ளது. இந்த ஆலையில் ஏர்பஸ்ஸின் H125 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன.
 
கர்நாடகாவில் உள்ள வேமகல் என்ற இடத்தில் இந்த உற்பத்தி அமைய உள்ளது. 2026 ஆம் ஆண்டில் உற்பத்தி தொடங்கப்பட்டு, 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஐரோப்பிய பன்னாட்டு விண்வெளி நிறுவனமான ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ், ஒரு இந்திய நிறுவனத்துடன் கைகோர்ப்பது இதுவே முதல்முறை ஆகும்.
 
இந்த தயாரிப்பு முயற்சி இந்திய ஆயுதப் படைகளுக்கு தேவைப்படும் அதிக எண்ணிக்கையிலான இலகு ரக பல்நோக்கு ஹெலிகாப்டர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
டாடாவின் TASL நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான சுகரன் சிங் இதுபற்றிக் கூறுகையில், "இந்தியாவில் H125 ஹெலிகாப்டர்களுக்கான இறுதி அசெம்பிளி ஆலையை நிறுவ ஏர்பஸ் உடன் கூட்டுசேர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். வான்வழி தளங்களில் TASL கொண்டுள்ள நிபுணத்துவம் மற்றும் ஏர்பஸ் குழுமத்துடனான எங்கள் தொடர்ச்சியான கூட்டணியின் வலிமையின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு உருவாகியுள்ளது. இது 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கு வலுசேர்ப்பதுடன், இந்தியாவின் வளர்ந்து வரும் ஹெலிகாப்டர் சந்தைக்கான ஆற்றலைக் குறிக்கிறது" என்று தெரிவித்தார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல கூடாது: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!