Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கை.. தமிழகத்தை முந்தியது கர்நாடகா, உத்தரபிரதேசம்..!

எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கை.. தமிழகத்தை முந்தியது கர்நாடகா, உத்தரபிரதேசம்..!

Siva

, ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (09:50 IST)
எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கையில் கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இளங்கலை மருத்துவ படிப்பு எம்பிபிஎஸ் இடங்களை மத்திய அரசு அதிகரித்துள்ள நிலையில், 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 1,08,940  இடங்கள் இருந்த நிலையில், 2024-25 கல்வியாண்டில் 118,137  என உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 60,422 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 57,715 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளன.

அதிகரிக்கப்பட்ட மருத்துவ சீட்டுகளின் எண்ணிக்கைக்கு பின்னர், கர்நாடக மாநிலம் அதிக மருத்துவ இடங்களைக் கொண்ட மாநிலமாக உள்ளது. இம்மாநிலத்த்ஹில் 12,545 மருத்துவ படிப்பு இடங்களும், உத்தரப்பிரதேசத்தில் 12,425 மருத்துவ படிப்பு இடங்களும் கொண்ட மாநிலங்களாக உள்ளன. தமிழ்நாட்டில் 12,250 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன. 2023-24 ஆம் கல்வி ஆண்டில் முதல் இடத்தில் இருந்த தமிழகம், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில், தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால், மீண்டும் தமிழகம் முதல் இடத்திற்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாலத்தீவை டீலில் விட்ட இந்திய பயணிகள்! சீனாவை குறிவைக்கும் மாலத்தீவு!