மழையால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்ள தயார் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர், மழையால் எவ்வளவு பெரிய பாதிப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றும், மழை பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்றும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார். தென்காசி மாவட்டத்துக்கு அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். சென்று ஆய்வு செய்வார், அதேபோல நெல்லை மாவட்டத்துக்கு கே.என்.நேரு சென்று நிலைமையை ஆராய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.