Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாஜ்மஹால் திறக்கும் தேதியை அறிவித்த மத்திய அரசு: என்னென்ன கட்டுப்பாடுகள்?

Advertiesment
தாஜ்மஹால் திறக்கும் தேதியை அறிவித்த மத்திய அரசு: என்னென்ன கட்டுப்பாடுகள்?
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (07:34 IST)
இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் கடந்த சில வாரங்களாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது தாஜ்மஹால் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சுற்றுலா தலமான தாஜ்மஹால் செப்டம்பர் 21 முதல் திறக்கப்படும் என்றும் பார்வையாளர்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தாஜ்மஹாலில் தினமும் 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேலும் தாஜ்மஹால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே தரப்படும் என்றும் தாஜ்மஹால் செல்லும் பார்வையாளர்கள் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேலும் தாஜ்மஹாலுக்கு நுழையும் முன்னரும், தாஜ்மஹாலுக்குள் நுழைந்த பின்னரும் ஆங்காங்கே கிருமிநாசினி வைக்கப்பட்டு இருக்கும் என்றும் அவ்வப்போது பார்வையாளர்கள் தங்கள் கைகளைக் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது ஐந்து மாதங்களுக்குப் பின்னர் தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட உள்ளதை அறிந்து சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கொரோனா 27.48 கோடி, இந்தியாவில் 42.77 லட்சம்: அதிர்ச்சி தகவல்