Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

Advertiesment
surf excel ad

Prasanth Karthick

, வெள்ளி, 14 மார்ச் 2025 (09:43 IST)

ஹோலி பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம் என உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில் சர்ஃப் எக்ஸெலின் விளம்பரம் ஒன்று வைரலாகத் தொடங்கியுள்ளது.

 

இன்று நாடு முழுவதும் பல பகுதிகளில் ஹோலி கொண்டாடப்படும் நிலையில் உத்தர பிரதேசத்தில் மசூதிகளை தார்ப்பாயால் மூடியுள்ளதும், இஸ்லாமியர்களை தொழுகைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு மதத்தினரின் கொண்டாட்டத்திற்காக மற்றொரு மதத்தினரின் சுதந்திரத்தை பறிப்பது நியாயமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

 

இந்நிலையில் சர்ஃப் எக்ஸெலின் பழைய விளம்பர வீடியோ ஒன்று வைரலாக தொடங்கியுள்ளது. அதில் எல்லாரும் ஹோலி கொண்டாடிக் கொண்டிருக்கும்போது வெள்ளை சட்டையுடன் சைக்கிளில் வருகிறாள் ஒரு பெண். அவள் மீது எல்லாரும் தண்ணீர் பலூன்கள், கலர் பொடிகளை அடிக்கிறார்கள். அவர்களிடம் உள்ள பொருட்கள் தீரும் வரை அவர்களிடம் தண்ணீர் பலூன்களால் அடி வாங்குகிறாள் அந்த பெண்.

 

அதன்பின்னர் இஸ்லாமிய சிறுவன் ஒருவனை வெளியே வரச் சொல்லி அவன் வெள்ளை ஆடையில் கரை படாமல் அழைத்து சென்று பள்ளிவாசலில் விடுகிறாள். இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் வைரலாக்க தொடங்கியுள்ளனர்.

 

மொழி திணிப்பு குறித்து தேசிய அளவில் ஏற்பட்டுள்ள விவாதத்தை வைத்து டைரி மில்க் செய்த விளம்பரத்தை தொடர்ந்து இந்த விளம்பரமும் ட்ரெண்டாகி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!