Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹோலி அன்னைக்கு பர்தா போட்டு மூடிக்கோங்க! இஸ்லாமியர்களுக்கு பாஜக பிரபலம் அறிவுரை!

Advertiesment
BJP

Prasanth Karthick

, புதன், 12 மார்ச் 2025 (10:34 IST)

உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றொரு பாஜக பிரபலமும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

மார்ச் 14 அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் இஸ்லாமியர்களும் தொழுகைக்கு செல்வார்கள். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் வெடிக்கலாம் என உத்தர பிரதேச போலீஸார் இஸ்லாமியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், ஹோலி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவதால், அதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பாஜக எம்எல்ஏ கேதகி சிங் பேசியபோது “ஹோலி நாளில் ஏதாவது தவறுதலாக நடந்தால் மருத்துவ கல்லூரியில் முஸ்லிம்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். முஸ்லீம்களுக்கு எல்லாவற்றிலும் பிரச்சினைதான். அவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சிகிச்சை அளிக்கும் வகையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

 

உத்தர பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங், ஹோலியின்போது வண்ணங்களை தவிர்க்க முடியாத முஸ்லிம்கள் தங்களை தார்பாயினால் மூடிக்கொள்ள வேண்டும் என்றும், வண்ணப்பொடிகள் வீசும்போது அது எவ்வளவு தூரம் வீசப்படுகிறது என்பதை ஹோலி கொண்டாடுபவர்கள் கவலைப்படுவதில்லை எனவும் பேசியுள்ளார்.

 

தொடர்ந்து பாஜக அமைச்சர்கள், பிரபலங்கள் முஸ்லீம்களை எச்சரிக்கும் விதமாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கியை எடுத்து சுட்ட வளர்ப்பு நாய்.. நாயின் உரிமையாளர் படுகாயம்..!