சோனியா காந்தி குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவரான சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் காரில் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்த அர்னாப் கோஸ்வாமியை அனாமதேய நபர்கள் தாக்கியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்னாப் மீதான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் 3 வார காலத்திற்கு தடை விதித்துள்ளது. இந்த மூன்று வார காலத்திற்குள் அர்னாப் முன் ஜாமீன் பெற்றுக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் அர்னாப் ஒத்துழைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.