Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லாருக்கும் இலவச கொரோனா சோதனை இல்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு!

எல்லாருக்கும் இலவச கொரோனா சோதனை இல்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு!
, செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (10:19 IST)
தனியார் ஆய்வகங்களில் அனைவருக்கும் இலவச கொரோனா சோதனை செய்ய தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய 157 அரசு ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 67 தனியார் ஆய்வகங்களும் செயல்பட்டு வருகின்றன. தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ரூ.4500 மத்திய அரசு கட்டணம் நிர்ணயித்தது. இந்நிலையில் அரசு ஆய்வகங்கள் போல தனியார் ஆய்வகங்களிலும் இலவச பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அனைத்து ஆய்வகங்களிலும் இலவச பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. அதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் “அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம். மத்திய அரசின் ஆயுஸ்மான் பார்த் யோஜனா அட்டை வைத்திருப்பவர்களுக்கும், மற்ற சில ஏழைகள் என்பதற்கான சான்றுகள் உள்ளவர்களுக்கும் மட்டும் இலவச சோதனை செய்தால் போதும்” என உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவர்களுக்காக கைதட்டுவோம்… ஆனால் அவர்கள் உடலை அடக்கம் செய்யவிடமாட்டோம் – சென்னையில் பரபரப்பு !