Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசியல் செய்வது யார்? ஆளும் கட்சியை ஒரே போடாய் போட்ட டிடிவி!!

அரசியல் செய்வது யார்? ஆளும் கட்சியை ஒரே போடாய் போட்ட டிடிவி!!
, வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (13:19 IST)
அரசியல் நடத்தாதீர்கள் என்று மற்ற கட்சிகளைப் பார்த்து சொல்லிவிட்டு நீங்கள் தான் அரசியல் செய்கிறீகள் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 
 
அமமுக பொதுச்செயளாலர் தனது நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ள சில பின்வருமாறு... 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை சொந்த உறவுகளே நெருங்கத் தயங்கும் நேரத்தில், அவர்களை நெருங்கி சிகிச்சையளிக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் மருத்துவர்கள். 
 
அவர்களில் ஒருவர் மரணமடைந்தபோது, அவரது உடலை தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய மக்கள் புரிதலின்றி எதிர்ப்பு தெரிவித்த உடனே, அரசு எச்சரிக்கை அடைந்து அதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
 
அரசியல் நடத்தாதீர்கள் என்று மற்ற கட்சிகளைப் பார்த்து சொல்லிவிட்டு, அம்மா உணவகங்களுக்கு நிதி தருகிறோம். நாங்களே நடத்துகிறோம் என்றெல்லாம் ஆளும்கட்சியினர் செய்துவரும் அதுமீறல்களையும் நீங்கள் அறிவீர்கள். 
 
இப்போதும் ஊரடங்கு தொடர்கிற சூழலில், உங்களின் உதவிகளும் தொடரட்டும். ஒவ்வொரு தொண்டரும் குறைந்தது ஓர் ஏழை குடும்பத்தையாவது அடையாளம் கண்டு அவர்களும் இந்த துயரிலிருந்து மீண்டுவர கைகொடுக்க வேண்டும் என கோரியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்திரிக்கையாளர்களை பழிவாங்கும் அமைச்சர்கள்?? – மு.க.ஸ்டாலின் கண்டனம்!