Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹேக் செய்யப்பட்டது உச்சநீதிமன்ற YouTube பக்கம்..! வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு..!!

ஹேக் செய்யப்பட்டது உச்சநீதிமன்ற YouTube பக்கம்..! வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு..!!

Senthil Velan

, வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (12:43 IST)
உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். 
 
பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். தற்போது உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தேயே மர்மநபர்கள் இன்று ஹேக் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உச்சநீதிமன்ற யூடியூப் பக்கத்திற்கு சுமார் 2.17 லட்சம் சந்தாதாரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த யூடியூப் பக்கத்தில் உச்சநீதிமன்றத்தின் முக்கிய வழக்கின் விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இச்சேவைக் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ‘ரிப்பிள்’ என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தைப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைகள் நேரலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. 

 
ஹேக் செய்யப்பட்ட யூடியூப் பக்கத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் உச்சநீதிமன்ற யூடியூப் பக்கத்தில் இருந்த முக்கிய காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!