ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும் என்றும் மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசியபோது, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வரலாற்றில் மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாகும். பஹல்காம் தாக்குதல் நடத்தியதன் மூலம், பாகிஸ்தான் கடுமையான எச்சரிக்கையை உருவாக்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.
“வரலாற்றில் மிகவும் மோசமான இந்த சம்பவத்திற்கு பதிலடியாக, பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டியது அவசியமாக இருந்திருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற தாக்குதல் போதாது,” என்றும் அவர் கூறினார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு சென்று எம்.பி.க்கள் விளக்கம் அளிப்பதால் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும், அவர்கள் அனைவரும் சுற்றுலா போல் பொழுதைக் கழிக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும்,” எனவும் அவர் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையிலான் கூறினார்.