Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

Advertiesment
Operation Sindhoor

Siva

, திங்கள், 12 மே 2025 (18:35 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் சமீப காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைக்கப்பட்ட நிலையில், இதுவரை 17 குழந்தைகளுக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது என்பதும், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகுலைந்தது என்பதும் தெரிந்தது.
 
இந்த நிலையில் சிந்தூர் என்ற பெயர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிவிட்டது. இந்த பெயரில் படம் தயாரிக்க கூடாது என சில தயாரிப்பாளர்கள் முன்வந்தனர். இந்நிலையில் மே 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என அந்த குழந்தைகளின் பெற்றோர் பெயரிட்டதாக குஷிநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சில குழந்தைகளுக்கு இந்த பெயரை வைக்க பெற்றோர் விரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரு குழந்தையின் பெற்றோர் கூறிய போது, “இந்த பெயரால் நாங்கள் பெருமைப்படுகிறோம். சிந்தூர் என்பது ஒரு வார்த்தை அல்ல, உணர்ச்சி. எங்கள் மகளுக்கு சிந்தூர் என பெயரிட முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
 
சிந்தூர் என்ற வார்த்தை எங்களுக்கு ஒரு  உத்வேகம். நாங்களும் இந்த பெயரைத்தான் நாங்களும் எங்கள் குழந்தைக்கு வைத்துள்ளோம்” என்றும் இன்னொரு தம்பதியினர் தெரிவித்தனர்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைகோர்த்தது அமெரிக்கா - சீனா.. 135%ல் இருந்து 30% என வரி குறைப்பு..!