சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை மற்றும் மூடு பனியின் தாக்கம் காரணமாக, சபரிமலைக்கு செல்லும் புல் மேடு பெரிய பாதை வனப்பாதைகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் மாற்று பாதையில் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.
மேலும் தொடர் மழை காரணமாக பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக, தமிழ்நாட்டில் மட்டும் இன்றி சபரிமலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. என்பதும், கனமழை காரணமாக தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.