Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் முக்கிய சீர்திருத்தங்கள்: சோனியா காந்தி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 16 மே 2022 (08:20 IST)
காங்கிரஸ் கட்சியில் செய்ய வேண்டிய முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்
 
நேற்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சீரமைக்க சிறப்புக்குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை சந்திக்க செயலாற்ற சிறப்பு குழு நியமிக்கப்பட இருப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும் கட்சியிலும் ஒருவருக்கு ஒரு பதவி, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதவி நீடிப்பு யாருக்கும் கிடையாது உள்ளிட்ட சில சீர்திருத்த முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
 
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய உதயம் எழ வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த சோனியா காந்தி இந்தியாவில் விழிப்புணர்வு பாதயாத்திரை நடத்த போவதாகவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த பாதயாத்திரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments