Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்திக்கு பொருத்தமான பெண்ணை பாருங்கள்: விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்த சோனியா காந்தி!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (09:42 IST)
ராகுல் காந்திக்கு பொருத்தமான பெண்ணை பாருங்கள் என ஹரியானா மாநில பெண் விவசாயிகளிடம் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்
 
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகள் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தங்கள் கிராமத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது டெல்லி வந்தால் விவசாயிகள் தங்கள் வீட்டில் சாப்பிட வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஐம்பதுக்கு மேற்பட்ட பெண் விவசாயிகள் சோனியா காந்தி இல்லத்திற்கு வந்தபோது அவர்களுக்கு விருந்து கொடுத்து உபசரிக்கப்பட்டது. 
 
அப்போது  ராகுல் காந்திக்கு நல்ல பொருத்தமான பெண்ணை பாருங்கள் என்று பெண் விவசாயிகளிடம் சோனியா காந்தி கூறியதாகவும் அதைக் கேட்ட விவசாயிகள் கண்டிப்பாக ஒரு நல்ல பெண்ணை பார்க்கிறோம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.  இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவான்மியூர் மண்டபத்திற்கு வந்தார் விஜய்.. இன்னும் சில நிமிடங்களில் விழா ஆரம்பம்..!

ஜூலை 3 வரை தமிழகத்தில் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments