அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து, கேரள மா நில வய நாட்டில் அவர் போட்டியிட்டு வென்ற அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.
இதனை அடுத்து அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவள் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கிலும் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இரண்டு ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்க அவர் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தி தரப்பில் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வஎண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு வரும் ஜூலை 21 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
மேலும், ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கை பதிவு செய்த குஜராத் எம்.எல்.ஏ பூர்னேஷ் மோடி, உச்ச நீதிமன்றதிதில் தன் கருத்துகளைக் கேட்காமல், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று அவர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.