Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டு வருவோம்- ராகுல் காந்தி

மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டு வருவோம்- ராகுல் காந்தி
, செவ்வாய், 25 ஜூலை 2023 (16:55 IST)
இன்று காலையில் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிரதமர் மோடியுடன், பாஜகவின் தலைவர் ஜேபி. நட்டா, பாஜக எம்பிக்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ''எதிர்க்கட்சிகள் நீண்ட நாட்களுக்கு எதிர்க்கட்சியாக இருக்க முடிவெடுத்துவிட்டனர்.  அதனால் அவர்கள் திசைதெரியாமல் சென்று கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு குறிக்கோள் இல்லாத எதிர்க்கட்சிகளை பார்த்ததேயில்லை… அவர்கள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளனர்.
பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் பெயரிலும், கிழந்திய கம்பெனி பெயரிலும் இந்தியா உள்ளது.   மக்களை தவறாக வழி நடத்துவதற்கு நாட்டின் பெயரைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது….குறிக்கோளற்ற எதிர்க்கட்சிகளை பொருட்படுத்தவே தேவையில்லை அது அவர்களின் தலையெழுத்து'' என்று கூறினார்.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ''நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி. மணிப்பூரில் உள்ள பெண்கள், குழந்தைகளின் கண்ணீரை துடைத்து உதவுவோம்….அங்கு மீண்டும் அமைதியை கொண்டு வருவோம்….இந்தியாவின் அடிப்படை அம்சங்களை மணிப்பூரில் கட்டமைப்போம் ''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

83 வயது பாட்டியை திருமணம் செய்த இளைஞர் ...2 ஆண்டில் விவாகரத்து!