ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

Siva
ஞாயிறு, 23 நவம்பர் 2025 (17:51 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று  நடைபெறவிருந்த திருமணம், எதிர்பாராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
மகாராஷ்டிராவில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, அவரது தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சாங்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
தகவல் அறிந்ததும் ஸ்மிருதி மந்தனா குடும்பத்துடன் மருத்துவமனைக்கு விரைந்தார். தற்போது அவரது தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 
 
தந்தையின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண தேதி குறித்து தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்