பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

Siva
புதன், 23 ஏப்ரல் 2025 (15:42 IST)
நேற்று காஷ்மீரை அதிரவைத்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் ஸ்கெட்ச்கள் டைம்ஸ் நவ்-க்கு எக்ஸ்க்ளூசிவாக கிடைத்துள்ளன. அசீப் பௌஜி, சுலேமான் ஷா மற்றும் அபூ தல்ஹா ஆகியோர் என பயங்கரவாதிகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ளவர்கள் பாதுகாப்புப் படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். லஷ்கர்-ஏ-தொய்பா  குழுவின் முக்கியத் தலைவர் சஃபுல்லா சாஜித் ஜுட்  இந்த தாக்குதலுக்கு மூளையானவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 45 வயதான இவர் இஸ்லாமாபாதில் இருந்து இயக்குகிறார்.  மற்றொரு முக்கிய நபராக ஜெய்ஷ்-ஏ-முகம்மதின் ஆசிப் ஷேக் தந்ஸீம் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட ஒருவர் என்று கூறப்படுகிறது.
 
இந்த தாக்குதல் மதியம் 2:30 மணியளவில் பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடந்தது. அடையாள அட்டைகள் கேட்டவுடன் பயங்கரவாதிகள் சுட்டுத் தாக்கினர். இதில் 28 பேர் பலியாகினர், இதில் நேபாளம் மற்றும் UAE-யைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் உள்ளனர்.
 
இந்திய இராணுவம் இந்த தாக்குதலை “கோழைத்தனமான வன்முறைச் செயல்” எனக் கண்டித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments