இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என கர்நாடக முதல்வர் சித்தராமையா, கார்கேவுக்கு செக் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் கூடியபோது மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் கார்கேவை அறிவித்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்றும் அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்றும் விரைவில் தொடங்க இருக்கும் பாரத் பாதயாத்திரை மூலம் ராகுல் காந்தி அனைத்து தரப்பு மக்களின் நீதியை உறுதி செய்வார் என்றும் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கேவை அறிவித்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா திடீரென பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.