மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க கர்நாடகா வந்த பிரதமர் மோடியின் முன்னாலேயே, சித்தராமையா மத்திய அரசை விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாகவே பாஜகவையும், ஒன்றிய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வரும் தெலுங்கானா முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடி தெலுங்கானா வரும்போதெல்லாம் வரவேற்காமல் வேறு அரசு பணிகளுக்கு சென்று விடுவதை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று பெங்களூரில் ஆளில்லா மெட்ரோ ரயில் இயக்கத்தை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடியை, நேரில் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சித்தராமையா.
மெட்ரோ ரயிலை இயக்கி வைத்த பிறகு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னால் பேசிய சித்தராமையா “பெங்களூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட ரயில் திட்டத்திற்கு மாநில அரசு ரூ.25,387 கோடி செலவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு வெறும் ரூ.7,458 கோடி மட்டுமே ஒதுக்கியது. ஒப்பந்தப்படி மாநில, ஒன்றிய அரசுகள் சமமாக நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை செயல்படுடுத்த வேண்டும். எனவே ஒன்றிய அரசு, மராட்டியம், குஜராத் மாநிலங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கர்நாடகாவுக்கும் அளிக்க வேண்டும்” என பேசியுள்ளார். இதனால் பிரதமர் மோடி அப்செட் ஆனதாக தகவல்கள் வெளியாகிறது.
Edit by Prasanth.K