ரூ.60 கோடி மோசடி வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய கோரி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், வெளிநாடு செல்ல விரும்பினால் முதலில் ரூ.60 கோடியைப் பிணை தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மோசடித் தொகை ரூ.60 கோடி என்பதால், அதற்கு சமமான தொகையை செலுத்திய பின்னரே வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த மோசடி வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் 4 மணி நேரம் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாக்குமூலத்தில், ராஜ் குந்த்ராவுடன் இணைந்து தொடங்கிய 'பெஸ்ட் டீல் டிவி' நிறுவனத்தின் அன்றாட நிர்வாகத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், தான் விளம்பர கட்டணத்தை மட்டுமே பெற்றதாகவும் ஷில்பா ஷெட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.