Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்குப்பதிவு! ரூ.60 கோடி மோசடி செய்தாரா?

Advertiesment
ஷில்பா ஷெட்டி

Mahendran

, வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (12:25 IST)
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது ரூ.60 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
விஜய் நடித்த குஷி, பிரபு தேவா நடித்த ‘மிஸ்டர் ரோமியோ’ உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களிலும், ஏராளமான இந்தித் திரைப்படங்களிலும் நடித்த ஷில்பா ஷெட்டி, தற்போது இந்த மோசடி புகாரால் பெரும் பரபரப்புக்கு ஆளாகியுள்ளார்.
 
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்துடன் தொடர்புடைய கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் சுமார் ரூ.60 கோடி மோசடி நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இந்த மோசடியில் ஷில்பாவுக்கு அவரது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக  மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை எதிர்த்த வழக்கு.. வழக்கு போட்டவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!