Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல யூட்யூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் புகார்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

Advertiesment
Harsha Sai

Prasanth Karthick

, புதன், 25 செப்டம்பர் 2024 (11:21 IST)

இந்திய அளவில் புகழ்பெற்ற யூட்யூபராக உள்ள ஹர்ஷா சாய் மீது நடிகை ஒருவர் பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சமீபகாலமாக திரை உலகில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதும், அதில் பல திரை பிரபலங்கள், முக்கிய புள்ளிகள் சிக்கி வருவதும் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த பாலியல் புகார் சம்பவங்கள் தற்போது யூட்யூப் பிரபலங்கள் வரை பரவியுள்ளது.

 

தெலுங்கில் பிரபலமான யூட்யூபராக , பிரபலமாக இருந்து வருபவர் ஹர்ஷா சாய். இவர் ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து அதை வீடியோவாக தனது சேனலிலும் பதிவேற்றி வருகிறார். இவருக்கு இந்தியா முழுவதுமே ஏராளமான ஃபாலோவர்கள் உள்ளனர்.
 

 

இந்நிலையில் ஹர்ஷா சாய் மீது 25 வயது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். ஹர்ஷா சாய் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவு கொண்டதுடன், அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி ரூ.2 கோடி வரை பணம் பறித்ததாகவும் ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஹர்ஷா சாய் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தகப்பையில் அரிவாள், கத்தி.. நெல்லையில் 3 பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட்..!