Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொல்கத்தா வழக்கில் பாதிக்கப்பட்டவரை நிர்பயா 2 என அழைத்த யூடியூபர்.. குவியும் கண்டனங்கள்..!

Advertiesment
கொல்கத்தா வழக்கில் பாதிக்கப்பட்டவரை நிர்பயா 2 என அழைத்த யூடியூபர்.. குவியும் கண்டனங்கள்..!

Siva

, வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (17:28 IST)
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யாத வழக்கு குறித்து யூடிபர் ஒருவர் நிர்பயா 2 என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்ததை பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநில அரசின் அழுத்தம் காரணமாக தான் மருத்துவ மாணவி கொலை வழக்கை திசை திருப்பும் வகையில் யூடியூபர் துருவ் ரத்தி பதிவு செய்திருப்பதாக பலர் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து யூடியூபர் துருவ் ரத்தி என்பவர் அந்த பதிவை நீக்கிவிட்டு அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். நிர்பயா வழக்குடன் கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கை ஒப்பிடுவது தவறு என்று பலர் கருத்து கூறினார் என்றும் அவர்களது கருத்தை யோசித்துப் பார்த்தது சரி என்று உணர்ந்ததால் நீக்கிவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அவர் பதிவு செய்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை வெளியிடுவது சட்டவிரோதம் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாய நிலத்திற்கான பாதை ஆக்கிரப்பு.. மனஉளைச்சலில் உழவர் சாவு.. அதிர்ச்சி தகவல்..!