நெல்லை அருகே உள்ள பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள், புத்தகப் பையில் அரிவாள், கத்தி ஆகியவை வைத்திருந்ததை அடுத்து, மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை அருகே ஸ்ரீபுரம் என்ற பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர் ஒருவர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பள்ளிக்கு வந்ததாகவும் இதனால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, அனைத்து மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனையிட்டபோது, மூன்று மாணவர்களின் புத்தகப் பைகளில் ஆயுதங்கள் சிக்கியதாகவும், குறிப்பாக அரிவாள் மற்றும் கத்தி இருந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பள்ளிக்கு வரும் மாணவர்களின் புத்தகப் பைகளில் புத்தகங்கள், நோட்டுகள் இல்லாமல், அதற்கு பதிலாக அரிவாள், கத்தி, இரும்பு ராடு போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளது சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகவும், பள்ளி மாணவர்களின் மோதலுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நெல்லை அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.