2 மகள்களை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.. புகார் அளிக்காத தாய்.. போலீஸ் செய்த தந்திரம்..!

Siva
வெள்ளி, 27 ஜூன் 2025 (07:41 IST)
ஐந்து ஆண்டுகளாக தனது இரண்டு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் ஜெய்ப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் மற்றும் அவர்களது தாயின் வாக்குமூலங்களை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்த பின்னர், காவல்துறை முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்தது. 
 
காவல்துறை துணை ஆணையர் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், "ஜூன் 20 அன்று, தாய் தனது இரண்டு மகள்களுக்கும் வயிற்று வலி இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். இருவரின் நிலையும் மோசமாக இருந்தது. இரு சிறுமிகளுக்கும் வயிற்று வலியும், மன அழுத்தமும் இருப்பதாக தாய் மருத்துவரிடம் கூறியுள்ளார். மருத்துவர் விசாரித்தபோது அந்த சிறுமிகளின் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து மருத்துவர் தான் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 
ஆனால் சிறுமிகளின் தாய் புகார் அளிக்க மறுத்ததாகவும், அவருக்கும் சிறுமிகளுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்  ஆலோசனை வழங்கியதாகவும், இந்த ஆலோசனை வழங்கும் நிகழ்வை ரகசிய கேமரா மூலம் வீடியோவாக பதிவு செய்து, அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து முதல் தகவல் அறிக்கையை  காவல்துறை பதிவு செய்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
 
மேலும் சிறுமிகளுக்கு மருத்துவக் குழு மூலம் பரிசோதனை நடத்தப்பட்டதில் அந்த சிறுமிகளின் தந்தை  கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மகள்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஜீரோ.. பிகாரில் என்டிஏ ஜெயிக்க அவர்தான் காரணமா

தீபாவளிக்கே வெடிக்க வேண்டிய வெடிகுண்டு.. கைதான நபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!

போலீசாருக்கு ரூ.50 லட்சம் கொடுத்தாரா நடிகர் ஸ்ரீகாந்த்? அமலாக்கத்துறை விசாரணை..!

தமிழகத்தில் 342 வெடிகுண்டு மிரட்டல்கள்.. குற்றவாளிகள் சென்னையை சேர்ந்தவர்கள்: காவல் துறை ஆணையர்

தேர்தல் முடிந்த சில மணி நேரத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்