பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 82% பேர் பாதிக்கப்பட்ட பெண்களின் தந்தையோ சகோதரனோ தான் இருக்கிறார்கள் என முன்னாள் பாகிஸ்தான் பெண் எம்பி கூறியிருப்பது அந்நாட்டில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது என்பது வெளிச்சமாகியுள்ளது.
பெரும்பாலும் பெண்களுக்கு எதிராக வன்முறையை செய்யும் குடும்ப உறுப்பினர்கள் தந்தை, சகோதரர், தாத்தா மற்றும் மாமா ஆகியோரை உள்ளடக்கியவர்களே என்றும் கூறப்படுகிறது
இந்த உண்மையை முன்னாள் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஷந்தனா குல்சார் கான் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்த வகை வன்முறைக்கு உள்ளாகும் சிறுமிகள் மற்றும் பெண்கள் போலீசாரிடம் முறையிட கூட தயங்குகிறார்கள். மேலும் பாகிஸ்தான் சமூகத்தில் யாரும் இந்த விஷயத்தைப் பற்றி பேச தயாராக இல்லையே, ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பாகிஸ்தான் சமூகத்தில் உள்ள ஆழமான மௌனம் மற்றும் பெண் பாதுகாப்பின் குறையை காட்டுகிறது.