Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மீனவர்களுக்கு தண்டனையை அதிகரிக்க வேண்டும்: எம்.பி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு தண்டனையை அதிகரிக்க வேண்டும்: எம்.பி பேச்சு
, புதன், 6 டிசம்பர் 2017 (14:57 IST)
தமிழக மீனவர்கள், இலங்கை கடலோர காவல்துறையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுமாக உள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்படுகின்றனர். படகுகள் விடுவிக்கப்படாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சனையை இருநாட்டு அரசுகளும் நிரந்தர தீர்வு காணும் என மீனவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
 
இதுகுறித்து அண்மையில் பேசிய இலங்கை எம்.பி. சரவணபவன் இந்தியா ஏற்றுமதி செய்யும் 40% மீன்கள் இலங்கை கடல் பகுதியில் தான் பிடிக்கப்படுகிறது என கூறினார். தமிழக மீனவர்களால் இலங்கையில் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர், எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்றும் தண்டனையை அதிகரித்தால் குற்றங்கள் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் செல்லூர் ராஜூ பாணியில் ரயில்வே துறை